Saturday, January 1, 2011

விதி



நீண்ட நெடுங்காலமாக
மிகுந்த விவாதத்திற்குள்ளான
ஒரு விஷயத்திலிருந்து
தொடங்குவோமா

விதி

உலகம் முழுக்க விதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அறிஞர்களும் மற்றெல்லோரும் நிறைய கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். பலப்பல பழமொழிகளும் parables களும் உலகெங்கும் உண்டு.

விதியைப் பற்றி திருவள்ளுவரும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

என்று வள்ளுவம் கூறுகிறது.

விதி இணங்குவோரை அழைத்துச் செல்லும்,
இணங்காதோரை இழுத்துச் செல்லும்
என்பது காரல் மார்க்ஸ் ஏதோ ஓர் இடத்தில் பயன்படுத்திய பிரெஞ்சு பழமொழி

இங்கிலீஷ் கவிஞர் இங்கால்ஸ்-ன்
கவிதையைப் பார்ப்போமா.....

மானுட விதியின் தலைவன் நான்!
புகழ், பேரன்பு, நல்வாய்ப்பு
காத்துக்கிடக்கின்றன என் காலடியில்,
நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும்
நான் நடைபோடுகிறேன்.
அகாதக் கடலாழங்களுக்குள்ளும்
பாலைவனங்களுக்குள்ளும் ஊடுருவுகின்றேன் நான்.
தொழுவத்தையும் அரண்மனையையும்
கடைத்தெருவையும் கடந்து செல்கின்றேன்.
விரைந்தோ தாமதமாகவோ
ஒவ்வொரு கதவையும் ஒருமுறை
யாரும் கேட்காமலேயே தட்டுகிறேன் நான்!
உறங்கிக் கொண்டிருப்போர் விழித்தெழுங்கள்
விருந்துண்டு கொண்டிருப்போர் முடித்தெழுங்கள்
நான் விலகிச் செல்வதற்கு முன்.
இது விதியின் நேரம்!
நிலையாமை கொண்ட மானுடத்தார்
விரும்புகின்ற ஒவ்வொரு நிலையையும்
என்னைப் பின்தொடர்வோர் அடைவர்,
ஒவ்வொரு எதிரியையும் வெற்றி கொள்வர்
மரணத்தைத் தவிர்ப்பர்;
ஐயங்கொள்வோரோ தயங்குவோரோ
தோல்விக்கும் ஏழ்மைக்கும்
துயரத்திற்கும் சபிக்கப்பட்டோர்
வீணிலும் பயனற்றும்
என்னிடம் இரப்பர்
நான் விடையளிப்பதுமில்லை மீண்டும் வருவதுமில்லை

மீண்டும் சந்திப்போம்